 பிரான்சில் குறிப்பிட்ட மாவட்டம் ஒன்றில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் குறிப்பிட்ட மாவட்டம் ஒன்றில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸின் இரண்டாம் அலை ஐரோப்பாவில் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஐரோப்பாவை சேர்ந்த நாட்டு தலைவர்கள் அடுத்தடுத்து முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரான்சின் Pays de la Loire - யில் உள்ள மாவட்டமான Mayenne-ல் கடந்த சில வாரங்களாக கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டு வருகின்றது.
இதனால் இந்த மாவட்டத்தின் 69 நகரங்களிலும் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் என்ற ஆணை ஒன்றினை Mayenne மாவட்டத் தலைமை ஆணையம் préfecture வெளியிட்டுள்ளது.
இந்த ஆணை மூலம் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும், வீதிகளிலும், வெளியிடங்களிலும் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
