மணிவண்ணனின் அலுவலகத்தை முற்றுகையிடும் பொதுமக்கள்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பதவிநிலைகளிலிருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என்று செய்திகள் வெளியாகிய நிலையில் அவரது அலுவலகத்தில் பெருமளவானோர் கூடி வருகின்றனர்.

கொக்குவில் சந்திக்கு அண்மையாகவுள்ள சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பிரேத்தியேக அலுவலகத்தில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், பொதுமக்கள் கூடி வருகின்றனர்.


அத்தோடு ஊடகவியலாளர்களும் அவரது அலுவலகத்தில் குவிந்தனர். எனினும் கட்சித் தலைமையின் உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைக்கும் வரை ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த முடியாது என்று வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பில் தமக்கு நெருக்கமானவர்களுடன் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மந்திராலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post