முல்லைத்தீவில் முறிந்து விழுந்த மரத்தில் சிக்கிய சகோதரர்கள் இருவரும் உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்புலப்பு பகுதியில் மரம் முறிந்துவிழுந்ததில் வீதியில் பயணித்த முள்ளிவளையைச் சேர்ந்த ஒன்றுவிட்ட சகோரர்கள் சிக்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மாலை 5மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து சிலாவத்தை நோக்கிப் பயணித்த முல்லைத்தீவு நீராவிடிப்பிட்டியைச் சேர்ந்த ஒன்று விட்ட சகோதரர்கள் இருவரே விபத்தில் சிக்கியுள்ளனர்.


கடும் மழை பெய்து வரும் சூழலில் காஞ்சூரை மரம் என்று கருதப்படும் மரம் அடியோடு சரிந்து அவர்கள் மீது விழுந்துள்ளது.

விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் மற்றையர் தையல் தொழிலாளி என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மரத்தின் அடிப்பகுதியில் அவர்கள் சிக்குண்டதால் அவர்களை உடனடியாக மீட்கமுடியாத நிலை காணப்பட்டதாகவும் பின்னர் படுகாயம் அடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் மரத்தில் சிக்கியபோதிலும் அதனை செலுத்திச் சென்றவர் பாய்ந்து தப்பியிருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்புலப்பு பகுதியில் முறிந்து விழுந்த மரத்தில் சிக்கிய 2வது நபரும் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்புலப்பு பகுதியில் வீதியோரத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த முள்ளிவளையைச் சேர்ந்த ஒன்றுவிட்ட சகோரர்கள் சிக்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்திருந்தார்.

இரண்டாம் இணைப்பு:-

இந்நிலையில் குறித்த விபத்தில் சிக்கிய 2வது நபரும் உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 5.00 மணிக்கு இடம்பெற்ற குறித்த விபத்தில் முல்லைத்தீவிலிருந்து சிலாவத்தை நோக்கிப் பயணித்த முல்லைத்தீவு நீராவிடிப்பிட்டியைச் சேர்ந்த ஒன்று விட்ட சகோதரர்கள் இருவரே சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post