தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்பிய கர்ப்பிணிப் பெண்ணுக்குக் கொரோனா!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தனிமைப்படுத்தலை முடித்து வீடு திரும்பிய கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிலாபம் ஆராய்ச்சிகட்டுவ பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து நாடு திரும்பிய அந்த பெண் வவுனியாவில் தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, சிலாபம் பொது வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.

இதன்போது அவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவர் தற்போது ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Previous Post Next Post