யாழ்.திருநெல்வேலியில் இன்று அதிகாலை நடந்த அனர்த்தம்! வயோதிபப் பெண் பலி!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 67 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கி வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post