கிளிநொச்சி கச்சேரி ஊழியர்கள் 50 பேருக்குக் கொரோனா பரிசோதனை!! நடந்தது என்ன?எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு கடமைக்கு செல்லும் ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி கடமைக்கு செல்பவர்களில் யாராவது கொரோனா தொற்று இனம் காணப்படாது கொரோனா வைரஸ் காவிகளாக சமூகத்தில் நடமாடி வருபவர்கள் ஊடகாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரா என்பதை அறியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 25ம் திகதி குறித்த 50 ஊழியர்களிடம் மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
Previous Post Next Post