போராட்ட அறிவிப்பின் எதிரொலி! விசாரணைகளில் இறங்கியது பொலிஸ்!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தியாகதீபம் திலீபன் நினைவேந்தலுக்கான நீதிமன்றத் தடை உத்தரவை அடுத்து ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் யாழ்ப்பாணம் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பொர்னாண்டோ நேரடியாகச் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த விசாரணை இடம்பெற்றுவருகிறது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர் மூத்த சட்டத்தரணியிடமே குறித்த விசாரணை இடம்பெற்றுவருகிறது.

எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் சந்நிதி முருகன் ஆலய வளாகத்தில் மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்திலும் அதன் தொடராக 28ஆம் திகதி வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் கதவடைப்புப் போராட்டத்திற்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக இணைந்து அழைப்புவிடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post