யாழ்.நகரில் கைக்குண்டுடன் நடமாடிய இளைஞன் பொலிஸாரால் கைது!
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இளைஞர் ஒருவரை கைக்குண்டுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொன்னகர் முறிகண்டியை வசிப்பிடமாக கொண்ட 22 வயது இளைஞனே யாழ்ப்பாண போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுள்ளார்.

இதனை அவதானித்த பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்தியபோது, அவரது உடமையில் இருந்து கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த இளைஞன் கைக்குண்டைக் காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள்களைத் திருடுவதாகவும் அதற்காகவே யாழ்ப்பாணம் வந்ததாகவும் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இரு மோட்டார் சைக்கிள்களைத் திருடியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post