சமூக இடைவெளியைப் புறந்தள்ளி யாழ். நகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்!(படங்கள்)

கொரோனாத் தடுப்பு சமூக இடைவெளியைப் பேணாது தீபாவளிப் பண்டிகைக் கொள்வனவுக்காக யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பொதுமக்கள் இன்று அலைமோதினர்.

வழமையாக தீபாவளி பண்டிகையின் முதல் நாள் சனக்கூட்டத்தால் யாழ். நகரம் நிரம்பி வழியும். எனினும், இம்முறை கொரோனா அச்சுறுத்தலால் அனைவரும் வீடுகளில் இருந்தவாறு தீபாவளியைக் கொண்டாடுமாறு சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் இந்துமதத் தலைவர்களும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதனால் யாழ். நகரம் இன்று மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், புடவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைகளில் பொதுமக்கள் வழமை போன்று அலை மோதினர்.

இதேவேளை, கொரோனாத் தொற்று ஆபத்தால் யாழ். நகரில் அங்காடி வியாபாரம் யாழ். மாநகர மேயரினால் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் ….


கிளிநொச்சியில்…

Previous Post Next Post