கிளிநொச்சியில் எட்டு வயதுச் சிறுவன் பரிதாபமாகப் பலி! (படங்கள்)எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தொண்டமான்நகர் பகுதியில் தற்காலிக வீடு ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் பெய்துவரும் தொடர் மழையால் குறித்த பாதிப்பு நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் தொண்டமான்நகர் பகுதியைச் சேர்ந்த நிரோஜன் ரிஷாந்தன் (வயது 08) என்ற சிறுவனே இடிந்து வீழ்ந்த சுவரில் சிக்குண்டிருக்கிறார்.

அவரை மீட்ட உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்ததாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post