யாழில் சிக்கிய விபசார விடுதியுடன் சேர்ந்து இயங்கிய கருக்கலைப்பு நிலையம்! (படங்கள்)எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்.தென்மராட்சி கரம்பகம் – பாடசாலை வீதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியும், அதனோடு இணைந்து இயங்கிய கருக்கலைப்பு நிலையமும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கொடிகாமம் பொலிஸார் நேற்றிரவு (10) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த விபச்சார விடுதியும், கருக்கலைப்பு நிலையமும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த இரு பெண்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கருக்கலைப்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசுவமடு மற்றும் நல்லூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான மூவரும் இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

தொடர்புபட்ட செய்தி:
Previous Post Next Post