யாழ்.இணுவில் மத்திய கல்லூரி மாணவனுக்குக் கொரோனா!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்ட இணுவில் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுவரும் 19 வயது உயர்தர வகுப்பு மாணவனுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருதனார்மடம் கொத்திணியில் நேற்றைய தினம் ஐவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்களில் ஒருவரே இணுவில் பகுதியைச் சேர்ந்த இணுவில் மத்திய கல்லூரியில் உயர்தரம் கலைப்பீடத்தில் கல்வி கற்று வரும் மாணவன் என தெரியவந்துள்ளது.

குறித்த தொற்றுறுதியான மாணவன் மருதனார்மடம் கொத்தணி பரவலையடுத்து யாழ். மற்றும் உடுவில் கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்வரை பாடசாலைக்கு சென்று வந்துள்ளமை அறியப்பட்டுள்ளது.

மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்டு சுன்னாகம் சந்தைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தொற்றுறுதியான ஒருவரின் நண்பர் என்ற அடிப்படையில் குறித்த மாணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் மூலமே இவ்வாறு அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

இதையடுத்து குறித்த மாணவனுடன் தொடப்புபட்டவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களையும் பரிசோதனைக்குட்படுத்துவதுடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தும் பணிகளை அப்பகுதி சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post