கழிவகற்றல் தொடர்பில் நல்லூர் பிரதேச சபை தவிசாளரின் அறிவிப்பு!

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் புதிய பொறிமுறை மூலம் திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சபையின் தவிசாளர் ப.மயூரன் அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இந்தத் திண்மக்கழிவகற்றல் செயற்பாடுகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதனால் பிரதேசங்களில் கழிவுகள் வீதியோரங்களில் கொட்டப்பட்டு பெரும் சுகாதார பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டனர்.

இந் நிலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபை தவிசாளர் ப.மயூரன் அவர்களின் இந்தப் புதிய பொறிமுறை மூலம் தூய்மையான பிரதேசத்தை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.

அதேநேரம் இச் செயற்பாடுகளுக்கு மக்களும் சரியான ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்திலேயே தடைகளின்றி இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post