யாழில் கொரோனா நோயாளி உணவருந்திய சைவ உணவகம் முடக்கம்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள அர்ஷதை சைவ உணவகம் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களால்  மூடப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்த நபர் கடந்த 31ஆம் திகதி குறித்த உணவகத்தில் வந்து உணவருந்திச் சென்றதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனை அடுத்தே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை அங்கு பணியாற்றும் 11 பணியாளர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post