யாழ். உடுவிலில் வீடொன்றுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அட்டூழியம்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டு விட்டுத் தப்பித்துள்ளது.

வயோதிபப் பெண்ணும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டிலேயே இந்தத் தாக்குதலை வன்முறைக் கும்பல் இன்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் மேற்கொண்டுள்ளது.

5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட முகத்தை மூடிக் கட்டியவாறு வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட உடமைகளைத் தாக்கிச் சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.

கொழும்பிலிருந்து வருகை தந்து வாடகை வீடு எடுத்து நீண்டகாலமாக வசிக்கும் தாயும் மகனும் எந்தவொரு பிரச்சினைக்கும் செல்வதில்லை என்று அயலவர்கள் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய கும்பலும் தாய் மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தாமல் அச்சுறுத்தும் வகையில் உடமைகளைச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போது, சுமார் ஒரு மணிநேரமாக பொலிஸார் அங்கு வருகை தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
Previous Post Next Post