யாழில் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தாக்குதலுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பத் தலைவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் பி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஆசீர்வாதப்பர் வீதியைச் சேர்ந்த சதாசிவம் நந்தகுமார் (வயது-48) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.

அவர் கடந்த முதலாம் திகதி வெளியில் சென்றிருந்ததாகவுத் பின்னர் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அன்றைய தினமே சேர்க்கப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 5 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார் என்றும் விசாரணையில் கூறப்பட்டது.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலைக்குச் சென்று இறப்பு விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல், உடற்கூற்றுப் பரிசோதனையின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

அத்துடன் இறப்பு விசாரணை வரும் 9ஆம் திகதி நீதிமன்றில் இடம்பெறும் என்றும் நீதிவான் தவணையிட்டார்.
Previous Post Next Post