மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய்! கிளிநொச்சியில் துயரம்!! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
  • இரண்டாம் இணைப்பு:
கிளிநொச்சி வட்டக்கச்சி மாணிக்கப் பிள்ளையார் கோவில் கிணற்றிலிருந்து 2 வயதுக் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதுடன், தாயார் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மேலும் இரண்டு பெண் பிள்ளைகளை (5,8 வயதுடைய) காணவில்லை என்று தெரிவித்த கிளிநொச்சி பொலிஸார், சம்பவம் இடம்பெற்ற கிணற்றில் இறங்கித் தேடுவதற்கு கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.

குடும்பப் பிரச்சினை காரணமாக 3 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் உயிரை மாய்க்க தாயார் முற்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
  • முதலாம் இணைப்பு:
கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளைகளுடன் கிணற்றுக்குள் தாயார் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய குழந்தைகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி என்ற பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.

கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்ற போதிலும் மீட்கப்பட்ட பெண் பதில் ஏதும் கூற மறுப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post