கிளிநொச்சியில் கத்திக் குத்து நடத்தியவரின் வீட்டுக்குத் தீ வைப்பு! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்த்தர் உயிரிழந்த நிலையில், கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவரின் வீட்டுக்கு தீ மூட்டப்பட்டிருப்பதுடன், உயிரிழந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள், உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

இன்று காலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 10ம் திகதி வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த அருளம்பலம் துஸ்யந்தன் என்ற இளம் குடும்பஸ்த்தர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேகநபருடைய வீட்டில் சில பொருட்களை எடுப்பதற்காக பொலிஸ் பாதுகாப்புடன் சிலர் சென்றிருந்த நிலையில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள், உறவினர்கள் இணைந்து எதிர்ப்பு தொிவித்ததுடன்,

இறந்தவருக்கு நீதி கிடைக்கவில்லை எனவும், பொலிஸார் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவும் கூச்சலிட்டுள்ளனர். இதயைடுத்து உயரிழந்தவரின் மனைவி மற்றும் உறவினர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். 

இதனையடுத்து சந்தேகநபரின் வீடு தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. எனினும் பொலிஸார் தீயை அணைத்துள்ளதுடன், பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post