ஆபத்தான கட்டத்தில் நாடு! இரு வாரங்களில் உச்சத்தை எட்டப் போகும் கொரோனாத் தொற்று!!


கோவிட் -19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் பி.சி.ஆர் சோதனைகள் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையிலான தொற்றுநோயாளர்களை வெளிப்படுத்தும். மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகள் போதாது. எங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கோரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. சமூகத்தில் கண்டறியப்படாது அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுடையவர்கள் நடமாடுகிறார்கள் என்று பொது சுகாதார பரிசோதர்கள் நேற்று எச்சரித்தனர்.

“வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வடையும். இரண்டு வாரங்களில் அதன் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் டெய்லி மிரர் ஆங்கில நாளேட்டுக்கு தெரிவித்துள்ளதாவது;

பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிப்பதன் ஊடாக சமூகத்தில் பெரும் தொற்றுநோய்களை வெளிப்படுத்தும் என்று நம்புகின்றோம். “

நாடு முழுவதும் உள்ள எங்கள் அதிகாரிகள் தினசரி அடிப்படையில் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதாகவும், கோரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதாகவும் எங்களுக்குத் தகவல் அளித்து வருகின்றனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பாளர்கள் பரிசோதிக்கப்படவில்லை. அவர்கள் பரிசோதிக்கப்பட்டதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.

கொழும்பில் வாழ்க்கை செல்லும் முறை கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எழுமாறான பிசிஆர் பரிசோதனை பெரும்பாலும் அதிக எண்ணிக்கையிலான தொற்றுநோய்களை வெளிப்படுத்தும்.

பொதுமக்களுக்கு உண்மையான தகவல்களை வழங்க அதிகாரிகள் தவறியது, கொழும்பில் பெரும்பாலான மக்கள் விடயங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளாத நிலையில், வைரஸ் மேலும் பரவுவதற்கு வழிவகுக்கிறது.

மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடுகளை மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவில்லை.

மாகாணங்களுக்கிடையேயான பயணக் கட்டுப்பாடுகளால் பயனில்லை. எங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் தேவை அல்லது நிலமை மோசமடையும் – என்றார்.
Previous Post Next Post