இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய தொற்று மற்றும் உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
 
நாட்டில் ஒரே நாளில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோர் 3 ஆயிரம் 623 பேருக்கு மேல் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.

அத்துடன், நாட்டில் இன்று 36 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 343 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 367 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். 27 ஆயிரத்து 339 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரத்து 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post