கனடாவில் மரணத்திலும் ஒன்றிணைந்த யாழ்ப்பாணத் தம்பதிகள்!

கனடாவில், யாழ்ப்பாணம் - மண்டைதீவைச் சேர்ந்த தம்பதிகள் மரணத்திலும் ஒன்றிணைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவு 02 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த, கனடா Brampton இல் வசித்து வந்தவர்களான சிவசம்பு குமாரலிங்கம் மற்றும் அவரது துணைவியார் குமாரலிங்கம் மஞ்சுளாதேவி (கிளி) என்ற தம்பதிகளே உயிரிழந்தவர்கள் ஆவார்.

கடந்த 22.05.2021 ஆம் திகதி கணவன் உயிரிழந்த நிலையில் அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 06 ஆம் திகதி இடம்பெறவிருந்தது.

இந் நிலையிலேயே அவரது துணைவியாரும் 12 நாட்களின் பின் நேற்று (02.06.2021) உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே இருவரின் இறுதிக் கிரியைகளும் ஒரே நாளில் இடம்பெறவுள்ளதாக அவர்களது உறவினர்கள் அறிவித்துள்ளனர். 

(சிவசம்பு குமாரலிங்கம் அவர்களின் மரண அறிவித்தலைப் பார்வையிட...)


Previous Post Next Post