பயணக்கட்டுப்பாடு தளர்வின்றி நீடிப்பு!

 தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு தளர்வின்றி தொடர்ந்தும் நீடிக்கும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

நீடிப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொரோனாரப் பரவல் நிலையினைக் கருத்தில் கொண்டே குறித்த கால நீடிப்புத் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4மணியுடன் பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post