பிரித்தானிய வரலாற்றில் குறுகிய காலத்தில் பதவி விலகிய பிரதமர்!

பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவி விலகியுள்ளார். பதவி ஏற்று 45 நாட்களுக்குள் அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

எவ்வாறாயினும், பிரதமர் பதவிக்கு அடுத்து ஒருவர் நியமிக்கப்படும் வரை அந்த பதவியில் செயற்பட நடவடிக்கை எடுப்பதாக லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இராஜினாமா செய்த பின்னர் லிஸ் ட்ரஸ், மகாராணி இரண்டாம் எலிசபெத்தால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதுவரை எந்த ஒரு பிரித்தானிய பிரதமரும் இவ்வளவு குறுகிய காலத்தில் பதவி விலகியதில்லை.

எனவே இவரது பதவி விலகல் காலம் தான் வரலாற்றிலேயே மிகக் குறுகிய பிரித்தானிய பிரதமரின் பதவிக் காலமாக இருக்கும்.

இதேவேளை, தாம் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் மன்னர் சார்ளஸிடம் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post