அரச உத்தியோகத்தரான இளம் பெண் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!

வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் நேற்றிரவு (03.05.2020) 10.00 மணியளவில் கிணற்றில் வீழ்ந்து இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

செட்டிக்குளம் பிரதேச சபையில் பணியாற்றும் அரச உத்தியோகத்தரான திருக்கேதீஸ்வரநாதன் கலைவாணி (வயது-21) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிந்தவர் ஆவார்.

குறித்த பெண் கிணற்றில் வீழ்ந்ததை அவதானித்த உறவினர்கள், அயலவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்து அவரை மீட்டு வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் அவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post