யாழ்.அல்லைப்பிட்டியில் கொரோனா பரவும் அபாயம்? அச்சத்தில் மக்கள்!

யாழ்.தீவகம், அல்லைப்பிட்டிப் பகுதியில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்பட்டு அங்கு கடற்படையினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அல்லைப்பிட்டி கடற்கரையில் உள்ள சந்தைக்கு அண்மையில் அமைக்கப்பட்ட குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கடற்படையினர் வெளியில் திரிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அச்சமடைந்த மக்கள், வேலணை பிரதேச செயலருக்கும், வேலணை பிரதேச சபைத் தவிசாளரும் தெரியப்படுத்தியிருந்தபோதும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் இவ்வாறு வெளியில் சுற்றித்திரிந்த கடற்படையினரை மக்கள் இனங்கண்டு அப் பகுதிக்குப் பொறுப்பான கடற்படை அதிகாரியிடம் இனங்காட்டியுள்ளனர்.

இவ்வாறு வெளியில் சுற்றிதிரியும் கடற்படையினரால் அப் பகுதி மக்களுக்கும் கொரோனா பரவக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால் மக்கள் பெரும் அச்சமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post