காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளைப் பகுதியில் காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த பளை, முள்ளியடியைச் சேர்ந்த அனோஜ் என்ற மாணவனைக் காணவில்லை என்று கடந்த 28ஆம் திகதி அவருடைய பேத்தியாரால் பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

குறித்த மாணவன் தாய் தந்தையர் அற்ற நிலையில் உறவினர்களுடன் வாழ்ந்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் புலோப்பளைக்கும் கிளாலிக்கும் இடைப்பட்ட களப்பு பகுதியில் சடலமாக காணப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளையும் அவர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
Previous Post Next Post