யாழ்.இளைஞனின் புதிய முயற்சி! சந்தைக்கு வந்தது விற்பனைக்கு!! (வீடியோ)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து மக்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் மக்கள் அதிகம் கூடும் வியாபார நிலையங்கள், வங்கிகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்குள் நுழையும் முன் கைகளை நன்றாகக் கழுவுமாறும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந் நிலையில் யாழ்ப்பாணத்தில் மேற்படி மக்கள் கூடும் இடங்களில் கை கழுவுவதற்கு ஏற்றவாறு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, கை கழுவும் போது காலால் மிதிக்க தண்ணீர் வரக் கூடியவாறான தொட்டியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தயாரித்து அதனைத் தற்போது விற்பனைக்கு விட்டுள்ளார்.

கை கழுவும் போது ரைப்பைத் திறந்து கை கழுவிய பின்னர் அதே ரைப்பை கைகளால் பூட்டும் போது பாதுகாப்புத் தன்மை குறைவாக உள்ளமையைச் சுட்டிக்காட்டியே இத் தொட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நீர் மற்றும் நேர விரையத்தையும் இதன் ஊடாக தவிர்த்துக் கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை ஒரு தொட்டியின் விலை 9 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தொட்டியைக் கொள்வனவு செய்ய விரும்புபவர்கள் கீழ்க் கண்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்:
0760553154 / 0784421182
Previous Post Next Post