லண்டனில் ஈழத் தமிழரின் கடைக்கு வெள்ளை இனத்தவரால் நடந்த கதி!

லண்டன் சவுத்ஹரோவில், ஈழத் தமிழரான மதி என்பவரால் நடத்தப்படும்,COORG - KAAPI என்ற கடையை ஒரு வெள்ளை இன நபர் அடித்து உடைத்துள்ளார்.

மதியோடு செய்தி ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு பேசிய வேளை, இது ஒரு இனத்துவேச தாக்குதல் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் தனது கடையில் வந்து தன்னோடு பேச முனைந்ததாகவும். வேலை செய்ய விடாமல் பேசிக்கொண்டு இருந்த அந் நபரை, தான் அங்கிருந்து செல்லுமாறு பணிவாக கேட்டுக் கொண்டதாகவும் மதி கூறினார்.

ஆனால் சுத்தியல் எடுத்துக் கொண்டு வந்து உன் கடையை உடைப்பேன் என்று குறித்த வெள்ளை இன நபர் கூறி விட்டு சென்ற விடையத்தை தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும் சிறிது நேரத்தில் அங்கே வந்த அந் நபர், சுத்தியலால் 2 கண்ணாடிகளையும் அடித்து உடைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post