பிரான்ஸ் கோடீஸ்வரப் பெற்றோர்களின் இரு மகள்களின் மோசமான செயல்!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸில் வாழும் இலங்கை கோடீஸ்வர தம்பதிகளின் மகள்கள் இருவர் போதைப்பொருள் கொண்டு செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 வருடங்களாக பிரான்ஸில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடும் இலங்கை கோடீஸ்வர பெற்றோரினால் இலங்கையில் வாழும் திருமணமான தங்கள் பிள்ளைகள் இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக பணம் அனுப்பி வந்துள்ளனர்.

எனினும் அவர்கள் அனுப்பிய பணத்தில் இரண்டு மகள்களும் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளதுடன், போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் 500000 ரூபாய் பெறுமதியான போதை பொருள் தொகையுடன் குறித்த இருவரும் கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த இருவரும் கொச்சிக்கடை, பல்லன்சேன பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். அவர்களின் பெற்றோர் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸில் குடியேறியுள்ளனர். அவர்கள் மேற்கொண்ட வர்த்தக நடவடிக்கை காரணமாக கோடீஸ்வரர்களாகியுள்ளனர். எனினும் அவர்களின் இரண்டு பிள்ளைகளும் சொகுசு வீடு ஒன்றை நிர்மாணித்து கொச்சிக்கடை பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த இருவரும் நாளுக்கு 7000 ரூபாவை போதைப் பொருளுக்காக செலவிடுவதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த இருவரும் சிறிது காலம் விமான நிறுவனத்தில் சேவை செய்துள்ள போதிலும் போதை பொருள் பயன்பாடு காரணமாக தொழிலை இழந்துள்ளனர்.

இதேவேளை, தங்கள் பிள்ளைகளுக்காக ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகனம் ஒன்றையும் பிரான்ஸில் வாழும் பெற்றோரினால் வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோர் வழங்கிய மோட்டார் வாகனத்தை பயன்படுத்தி அவர்கள் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Previous Post Next Post