
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மட்டுவில் கிழக்கு தேவாலய பகுதியை சேர்ந்த தர்மகுலராசா மாருதி (22) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தந்தை,தாய் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்தவேளை வீட்டினுள் சுவாமி அறைக்குள் குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ வேளை பெண்ணின் இரு தம்பிமாரும் (சிறியவர்கள்) விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர் தாத்தாவும் வீட்டில் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சாவகச்சேரி நீதிமன்ற நீதவானின் பணிப்பின் பின்னர் தென்மராட்சி பிரதேசத்தின் திடீர் மரண விசாரணை அதிகாரி சி. தவமலர் விசாரணைகளை மேற்கொண்ட பின் யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணரின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.