பிரான்ஸில் நன்மதிப்பை இழந்து வரும் தமிழ் இனம்! வெட்கித் தலைகுனியும் அவலநிலை!! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸ், அதிகளவான தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் நாடு. இங்கு தமிழ் மக்களின் இருப்பு என்பது ஆழமாக வோரூன்றியுள்ளது.

பிரான்ஸ் நாட்டு மக்களைப் பொறுத்தவரை ஈழத் தமிழர்கள் தொடர்பில் நல்ல அபிப்பிராயங்களும் அவர்கள் மீதான நன்மதிப்பும் நீண்ட காலம் தொட்டு இருந்து வருகின்றது.

நாட்டில் இன மோதல் ஈழத் தமிழர்களை நன்கு பாதித்துள்ளது, அங்கு அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொண்டு, வதிவிடத்தை வழங்கியதுடன், தமிழர்கள் தங்களின் இன, மத, மொழி ரீதியிலான கலை, கலாசார, விழுமியங்களைக் கடைப்பிடிப்பதற்கு எதுவித தடைகளும் அந் நாட்டு அரசாலோ அல்லது மக்களாலோ ஏற்படுத்தப்படுவதில்லை.

மாறாக தமிழர்களின் கலாசாரம் அந் நாட்டு மக்களை மனதார ஈர்த்துள்ளதுடன், தமிழர்களின் நிகழ்வுகளிலும் அவர்கள் பங்குபற்றி வருகின்றனர்.

இந் நிலையில், பிரான்ஸ் நாட்டு மக்கள் ஈழத் தமிழர்கள் மீது கொண்டுள்ள நன் மதிப்பில் கறை விழும் அளவுக்கு அண்மைக் காலமாக தமிழர்கள் மத்தியில் இடம்பெறும் படுகொலைகள் காரணமாகி விடுகின்றது.

இலங்கை அரசால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக நாம் தெரிவித்து வரும் நிலையில், புலம்பெயர் தேசங்களில் தமிழினமே தமிழர்களைக் கொலை செய்து வருகின்றமை இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் படுகொலைச் சம்பவத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி விடும்.

பிரான்ஸில் தமிழ் சூழலில் இடம்பெறும் இத்தகைய குடும்ப உறவினர்களுக்கிடையிலான, நண்பர்களுக்கிடையிலான கொலைகள் அதிகரித்து வருகின்றமை எதிர்காலத்தில் ஆரோக்கியமானதொன்றல்ல.

அதேநேரம் இக் கொலைச் சம்பவங்கள் ஏற்கனவே நெருக்கடிகள், மன அழுத்தங்கள் மிகுந்த புலம்பெயர் வாழ்வு மேலும் சிதைவடைந்து செல்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலையைத் தோற்றுவித்துவிடும்.

இதேவேளை கொரோனா வைரஸ் முடக்கங்களின் பின்னர் நாளாந்த வாழ்வில் எதிர்கொள்ளும் பெரும் நெருக்கடிகளும் அவை உருவாக்கும் மன அழுத்தங்களும் சிலரை இதுபோன்ற குரூரமான முடிவுகளை நோக்கித் தள்ளிவிடக் காரணமாகின்றனவா?

இது போன்ற கொலைகள் பிரான்ஸில் ஒவ்வொரு மாதமும் நம்மவர்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இதற்கான காரணிகளைக் கவனத்தில் எடுக்காமல் அவற்றைக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றோமா?

“மிருக வெறி” என்று மேலெழுந்தவாரியாகக் கருத்துச் சொல்லிவிட்டு, மன அழுத்தம்தான் இதற்குக் காரணம் என சாட்டுச் சொல்லி விட்டுப் போகின்ற ஒரு விவகாரமாக இது? குற்றம் கண்டுபிடிக்கும் சட்ட ரீதியான விசாரணைகளுக்கு அப்பால் சமூக நோக்கு சார்ந்த இத்தகையை முக்கிய கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றது.

புலம்பெயர் தேசத்தில் தமிழ் இனத்துக்குள் நிகழும் இத்தகைய உட்சிதைவுகள் சமூக நோக்குடையவர்களால் விவாதிக்கப்படவும் ஆராயப்படவும் வேண்டிய முக்கிய விவகாரமாக மாறியுள்ளன.
பிரான்ஸ் பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட அந் நாட்டு மக்கள். 

தலையில் பூச் சூடி பாதுபாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பிரான்ஸ் பெண் பொலிஸார். 
Previous Post Next Post