யாழில் கடும் மழை! பல வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்!! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் இன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக மீண்டும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஏற்கனவே வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளாத பகுதிகளும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

யாழ். நகர் பகுதியில் பல விற்பனை நிலையங்களுக்குள் மீண்டும் நீர் புகுந்துள்ளது.

அதேபோல் நல்லூரில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலும் அதிக நீர் தேங்கியுள்ளது.

கொக்குவில், கோண்டாவில், தாவடி, நல்லூர், கல்வியங்காடு, சாவகச்சேரி உட்பட்ட பகுதிகளிலும் கடும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

சில பகுதிகளில்  மக்களின் வீடுகளுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்து கொண்டதால் மக்கள் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். 

இதேவேளை எதிர்வரும் புதன்கிழமை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழக புவியியற்றுறை விரிவுரையாளர் காலநிலை அவதானி நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று  (06) பிற்பகல் 3 மணியளவில்  மன்னார் வளைகுடாவில் வலுக்குறைந்து தாழமுக்கமாக மாறியுள்ள புரேவி புயலானது கடற்பகுதியில் அழிவடைந்து வருகின்றது.

எனினும் எதிர்வரும் புதன்கிழமை வரை வடக்கு மாகாணத்தில் மழை பெய்ய வாய்ப்புண்டு.

இன்று மாலை அல்லது இரவு அல்லது நாளைக் காலை (07.12.2020) வடக்கு மாகாணத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியமானது என்று தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post