யாழில் மழை நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து ஒருவர் உயிரிழப்பு! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலைப் பகுதியில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நபர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கிருஷ்ணபிள்ளை சிவகுமார் (வயது 34) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். 

அவரது வீட்டுக்கு அண்மையில் துன்னாலை வடக்கு மெதடிஸ்த தமிழ்க்கலவன் பாடசாலைக்குக்கு பின் பகுதியில் உள்ள ஒழுங்கையில் அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த ஒழுங்கைப் பகுதி நீர்நிறைந்து காணப்படுவதால் அதனை மக்கள் பாவனைக்கு குறைத்து வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

எனவே இவர் மழை நீர் நிரம்பிய குழிக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபர் திருமணமாகாதவர் என்றும் சகோதரியுடன் வாழ்ந்துவந்தவர் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post