யாழில் 8 பேருக்குக் கொரோனா! நெல்லியடி சந்தையில் வியாபாரி ஒருவர் அடையாளம்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் நெல்லியடி பொதுச் சந்தை வியாபாரி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 366 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது.

நெல்லியடி பொதுச் சந்தையில் இன்று வியாபாரிகளிடம் எழுமாறாக மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தியதில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 9 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 5 பேர் மிருசுவிலில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மன்னார் நானாட்டானில் உள்ள ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்புடைய ஒருவரின் குடும்பத்தினருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஜாஎலக்கு சென்று திரும்பிய நிலையில் அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நிலையில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார்.

மேலும் அச்சுவேலிச் சந்தையில் கடந்த வாரம் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட வியாபாரி ஒருவரின் மனைவிக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டது.

அத்துடன், கிளிநொச்சி கரைச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்கள் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.
Previous Post Next Post