கிளிநொச்சியில் மனைவியை கொலை செய்து கணவனும் உயிர்மாய்ப்பு; 3 பிள்ளைகள் நிர்க்கதி! (படங்கள்)

கிளிநொச்சியில் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துள்ளார் குடும்பத்தலைவர் ஒருவர். அதனால் அவர்களது 3 பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ளன.

கிளிநொச்சி கண்டாவளை – சிவபுரம் கிராமத்தில் இன்று (01) நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன், மனைவியின் சேலையில் தூக்கிட்டு அவரும் உயிரை மாய்த்துள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.

வேலாயுதம் சிவஞானம் (வயது-38) அவரது மனைவி குகனேஸ்வரி (வயது-36) என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.

அவர்களுக்கு 16 வயதில் மகளும், 13 மற்றும் 6 வயதில் இரண்டு மகன்களும்
உள்ளனனர்.

மேதிலக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post