சற்றுமுன்: யாழ்.வடமராட்சியில் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு!


வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் சட்ட விரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சற்று முன்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தை கடற்படையினர் தடுத்து நிறுத்திய போது கடற்படையினரை மோதுவது போல வானத்தைச் செலுத்தி தப்பிச் செல்ல முற்பட்ட நிலையிலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து டிப்பர் வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை கைவிட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதன்போது வாகனத்துடன் கூட வந்த மோட்டார் சைக்கிளும் கைவிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு பருத்தித்துறை பொலிசார் விசாரனைகாக சென்றுள்ளனர்.
Previous Post Next Post