24 மணிநேர்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஐந்து கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 5 கோவிட்-19 நோயாளிகள் இன்று இரவு 9 மணிவரையான 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வரும் திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த ஒருவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அரியாலையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவரும் புத்தூரைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரும் பலாலியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவரும் கோப்பாயைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வடைந்துள்ளது.
Previous Post Next Post