வடக்கில் நேற்று 459 பேருக்குத் தொற்று! 8 பேர் உயிரிழப்பு!!


வடக்கு மாகாணத்தில் நேற்று (செப்.8) புதன்கிழமை 459 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 8 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 546 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத் துறையின் இன்றைய அறிக்கையின் படி, நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 178 தொற்றாளர்களும் வவுனியா மாவட்டத்தில் 121 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 77 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 57 தொற்றாளர்களும் மன்னாரில் 27 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 பேரும் மன்னார் மாவட்டத்தில் 2 பேரும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 31 ஆயிரத்து 375 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 530 பேர் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 651 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 311 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post