கனடாவில் ஓரினச்சேர்க்கைப் பெண்களின் திருமணத்தை நடத்திய குருக்களுக்கு மிரட்டல்! தமிழ்ப் பெண் கைது!!

கனடாவில் ஓரினச்சேர்க்கைப் பெண்களின் திருமணத்தை நடத்தி வைத்த குருக்களுக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுத்த தமிழ் பெண்ணான உமாநந்தினி நிஷாநாதன் (47) என்பவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கனடாவில் ஓரினச்சேர்க்கைப் பெண்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தை நடத்திய ரங்கராஜ குருக்களை கடந்த மாதம் 28 ஆம் திகதி தொலைபேசியில் தொடர்பு கொண்ட குறித்த பெண், மிரட்டியதாகத் தெரிவித்தே டொராண்டோ பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் மீது மிரட்டில் மற்றும் கிரிமினல் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த குருக்களுக்குத் தொலைபேசியூடாக பல மிரட்டில்கள் விடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post