06 வயதுச் சிறுமியை பாழடைந்த வீட்டிற்குள் இழுத்துச் சென்ற 17 வயதுச் சிறுவன்! மடக்கிப்பிடித்த மக்கள்!!


முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தீர்த்தக்கரைப் பகுதியில் 06 வயதுச் சிறுமி ஒருவரை இழுத்துச் சென்ற சிறுவன் ஒருவர் பொதுமக்களால் பிடித்து நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

தீர்த்தக்கரையில் தனியாக நின்றிருந்த சிறுமி ஒருவரை 17 வயதுடைய சிறுவன் ஒருவர் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் இழுத்துச் சென்றதுடன் சிறுமியின் வாய், கை என்பவற்றையும் கட்டுவதற்கு முயற்சித்திருக்கின்றார்.

துணிந்து செயற்பட்ட குறித்த சிறுமி அங்கிருந்து அபாயக்குரல் எழுப்பியதுடன் வெளியே ஓடிவந்துள்ளார்.

சம்பவத்தை அவதானித்த அந்தப் பகுதி மக்கள் அங்கு சென்று சிறுவனைப் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர். 
Previous Post Next Post