இன்று காலை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் தரம் 8B இல் கல்வி பயிலும் ப.சரணிகா என்ற மாணவியை பாடசாலைக்கு தந்தை அழைத்து சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வற்றாப்பளை அம்மன் என பெயர் பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு இல்லாத பேருந்து, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியது.
விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.