நாட்டில் தலைவிரித்தாடும் பஞ்சம்! முதியவர்களைக் கட்டி வைத்துத் தாக்கி விட்டு அத்தியாவசியப் பொருள்கள் கொள்ளை!!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் நேற்று(17) இரவு 11.00மணியளவில் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்த முதியவர்களின் கைகளைக் கட்டிவிட்டு வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

இயக்கச்சி பகுதியில் வசித்து வந்த இரு முதியவர்கள் மற்றும் அவரது மாற்றுத்திறனாளியான மகன் ஆகியோர் உறக்கத்திலிருந்துள்ளனர்.

அதன்போது முதியவர்களின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்த முதியவர்களின் கைகளைக் கட்டிவிட்டு வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருள்களான அங்கர், சீனி உட்பட சில பொருள்களும் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக வளர்த்த கோழிகள், பணம், நகை என்பனவும் திருடியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் முதியவர்கள் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இயக்கச்சி பகுதியில் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாகவும் அதிலும் அத்தியாவசிய பொருள்கள் திருட்டுப் போவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை  நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், தட்டுப்பாடும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Previous Post Next Post