பிரான்ஸில் துப்பாக்கி தோட்டாக்களுடன் இலங்கையர் கைது!


பிரான்ஸில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Toulouse நகரில் முட்டை பெட்டியில் மறைத்து வைத்த 700 சிகரெட் பெட்டி மற்றும்  துப்பாக்கித் தோட்டாக்களுடனும் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் வாகனம் ஓட்டிச் சென்ற சாரதி ஒருவரை பொலிஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர் இலங்கையர் என தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் பாரிஸில் உள்ள கறுப்பு சந்தைக்கு செல்லும் வழியில் இவ்வாறு பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

ஸ்பெயினில் இருந்து கொண்டு வந்த சிகரெட் பெட்டிகளை பாரிஸ் கறுப்பு சந்தையில் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த இலங்கையரின் முட்டை அட்டைப்பெட்டிக்குள் துப்பாக்கி தோட்டாக்களும் காணப்பட்டுள்ளதாகவும் அதனையும் மீட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர் அந்தப் பகுதி ஜோந்தாமினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Previous Post Next Post