வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் பாலத்துடன் மோதி விபத்து! மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!!


கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள வெளிகண்டல் பாலத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தருமபுரத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதிக வேகத்துடன் பயணித்துள்ள நிலையில், வேகக் கட்டுப்பாட்டையிழந்து குறித்த பாலத்துடன் மோதுண்டுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் ரவிந்திரன் எனும் 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post