முறிகண்டியில் உழவு இயந்திரம் - சொகுசு பஸ் விபத்து! பிரதேச சபை ஊழியர் உயிரிழப்பு!! (படங்கள்)


மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டிப் பகுதியில் இன்று மதியம் நடந்த விபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார சிற்றூழியர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.

மணவாளன்பட்டமுறிப்பைச் சேர்ந்த ஜெயராம் பிரசாத் என்ற 35 வயது இளம் குடும்பத்தலைவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முறிகண்டியில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த பிரதேச சபையின் கழிவகற்றும் உழவியந்திரம் மீது, அதே திசையில் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று பின்புறம் மோதி விபத்து நடந்துள்ளது.

உழவியந்திரத்தைச் செலுத்திய பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உழவியந்திரத்தில் பயணித்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

படுகாயமடைந்த மூவரும் கிளிநொச்சி மருத்துவமனையையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாங்குளம் பொலிஸார் இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post