நாளையும் ஏழரை மணிநேர மின்வெட்டு!

இன்றைய தினத்தை போன்றே நாளையும் (3) நாடுமுழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (3) காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அவ்வாறே, மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணிநேரமும் மின்தடை அமுலாகும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க அறிவித்துள்ளார்.
Previous Post Next Post