
சம்பவத்தில் யாழ்.தீவகம் ஊர்காவற்றுறைப் பகுதியைச் சேர்ந்த ஊவா பல்கலைக்கழக மாணவனான உதயகுமார் கனிஸ்ரன் (வயது-23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் பருத்தியடைப்புக் காட்டுப் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவரது காதலி ஒரு மாதத்திற்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் விரக்தியடைந்த குறித்த மாணவன், தானும் தற்கொலை செய்து உயிர்மாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.