பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையின் முழு வடிவம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.

இதன்போது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை தமது அரசாங்கம் விரைவில் முன்னெடுக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் வெளியேறுமாறு கோசங்கள் எழுப்பப்படுகின்றமையானது நாட்டின் ஜனநாயகத்தினை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அத்துடன், சேதனப்பசளை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இது உகந்த தருணம் அல்ல என சுட்டிக்காட்டிய பிரதமர், விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் உர மானியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், நாட்டில் போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் டொலர்களை வெகுவாக பாதிப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
Previous Post Next Post