வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வருபவர்களிடம் நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் நுாதன திருட்டு சம்பவங்களில் கடந்த 3 வருடங்களாக ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அச்சுவேலி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயான அந்த பெண், வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் யாழ்ப்பாணத்திற்கு வருபவர்களிடம் மோசடி செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருபவர்களிடம், பணம் மற்றும் நகைகளை மோசடி செய்து வந்துள்ளார்.

குப்பிளான் பகுதியில் திருட்டு முயற்சியின்போது இவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

கைதான பெண்ணிடமிருந்து வெளிநாட்டு பணங்களும் மற்றும் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் வீதியில் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகள் அருகில் இருந்த cctv கமராவில் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண் யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post