
இச்சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாணம் - கண்டி வீதி, கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தபால் ரயில் சென்று கொண்டிருந்த போது தனது வீட்டிற்கு செல்வதற்காக ரயில் கடவையை கடக்க முற்பட்ட சமயமே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.